கமலா ஹாரிஸை முன்நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: ஜோ பைடன் விளக்கம்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் விலகுவதற்கான காரணத்தை ஜோ பைடன் விளக்கியுள்ளார்.
சிறந்த வழி
கமலா ஹாரிஸை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவதாக ஜோ பைடன் அறிவித்த நிலையில், தற்போது தேர்தலில் இருந்து தான் விலகியது குறித்து பேசியுள்ளார்.
அவர் தனது உரையில், ''ஜனாதிபதியாக எனது சாதனை, உலகில் எனது தலைமை, அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான எனது பார்வை அனைத்தும் இரண்டாவது பதவிக்கு தகுதியானவை என்று நான் நம்புகிறேன்.
ஆனால், எதுவும்..எதுவுமே நமது ஜனநாயகத்தை காப்பாற்றும் வழியில் வர முடியாது. அதில் தனிப்பட்ட லட்சியமும் அடங்கும். எனவே, புதிய தலைமுறைக்கு ஜோதியைக் கொடுப்பதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன்.
நமது தேசத்தை ஒன்றிணைக்க இதுவே சிறந்த வழியாகும். உங்களுக்கு தெரியும், பொது வாழ்க்கையில் நீண்ட வருட அனுபவத்திற்கு ஒரு நேரமும், இடமும் உள்ளது. புதிய குரல்கள், புதிய குரல்கள் - ஆம், இளைய குரல்களுக்கு ஒரு நேரமும் இடமும் உள்ளது. அந்த நேரமும், இடமும் இப்போதுதான்'' என தெரிவித்துள்ளார்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர
மேலும் காசா போர் குறித்து பேசிய பைடன், ''காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும், மத்திய கிழக்கிற்கு அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவரவும் தொடர்ந்து உழைக்க வேண்டும்'' என உறுதியளித்தார்.
அத்துடன் உக்ரைனுக்கு அவர் அளித்த ஆதரவு உட்பட வெளியுறவுக் கொள்கையில் தனது சொந்த தலைமையை மேற்கோள் காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |