ஜனாதிபதி தேர்தல் நேரலை விவாதம்... தடுமாறி, தத்தளித்து உறைந்து போன ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்புடன் நடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முதல் நேரலை விவாதத்தில் ஜோ பைடன் மிக மிக மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளார்.
ஜோ பைடன் குழப்பத்தில்
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு நடந்த இந்த விவாதத்தின் போது ஜோ பைடன் தடுமாறி, தத்தளித்துள்ளார் என்றே கூறப்படுகிறது. 81 வயதான அவர் பேசும் முன்னர் தொண்டையை சரி செய்ய முடியாமலும் திணறியுள்ளார்.
தேசத்தின் கடன் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சிறார் மற்றும் முதியோர் சுகாதாரம் மற்றும் கவனிப்பு தொடர்பிலும், சுகாதாரத்துறை குறித்தும் ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், ஜோ பைடன் குழப்பத்தில் இருப்பது மிக மிக மோசமான நிலை என அரசியல் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜோ பைடன் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார் என்றும், அதனாலையே அவருக்கு வார்த்தைகளில் தடுமாற்றம் காணப்பட்டது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாதத்தின் போது, நாட்டின் பொருளாதாரம் செழித்து வருவதாக ஜோ பைடன் தெரிவிக்க, அதற்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், உண்மையில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பு முகாம்களில் தள்ளியதாக
புலம்பெயர் கொள்கை தொடர்பில் இரு தலைவர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். ட்ரம்பின் ஆட்சி காலத்தில் தான் பிள்ளைகளையும் குடும்பத்தையும், குடியிருப்பையும், சமூகத்தையும் பிரித்து, அவர்களை தடுப்பு முகாம்களில் தள்ளியதாக ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீப மாதங்களில் ஜோ பைடன் பல முக்கிய சந்திப்புகளின் போதும் உறைந்து போய் ஸ்தம்பித்து நின்ற சந்தர்ப்பங்கள் அதிகம். இத்தாலியில் உக்ரைன் ஜனாதிபதி உட்பட பல முதன்மையான தலைவர்கள் முன்னெடுத்த முக்கிய கூட்டம் ஒன்றில் ஜோ பைடன் உறைந்து போய் காணப்பட, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எழுந்து சென்று ஜோ பைடனை எழுப்பியுள்ளார்.
ஒபாமா உடனான ஒரு நிகழ்ச்சியின் போதும் ஜோ பைடன் இப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ள ஒபாமா அவரை மீட்டுள்ளார். இத்தாலியில் வைத்து, அந்த நாட்டின் பிரதமர் ஒருமுறை ஜோ பைடனை மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |