முக்கிய சந்திப்பு: சுவிட்சர்லாந்துக்கு வந்து சேர்ந்தார் ஜோ பைடன்
ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்புக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு வந்து சேர்ந்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி 4.22 மணிக்கு சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் சிறப்பு விமானம். தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் ஜோ பைடன் ஹொட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 16ம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜெனீவாவில் சந்தித்துப் பேச உள்ளார்கள்.
ஜனாதிபதிகள் இருவரும் சந்தித்துப்பேச இருக்கும் Villa La Grange வளாகம், மற்றும் அதற்கு அருகிலுள்ள கட்டிடங்களைச் சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.