ரோட்டு கடையில் காரை நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! வைரல் புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ரோட்டு கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சுவைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
மக்களின் செல்வாக்கு மூலம் டிரம்பை வீழ்த்தி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றவர் ஜோ பைடன். இவர் பதவி ஏற்று ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுவிட்டார்.
If it’s above freezing, then it’s ice cream weather. pic.twitter.com/o8TOL05h3X
— President Biden (@POTUS) January 25, 2022
இந்நிலையில் இவர் அமெரிக்காவின் Washington பகுதியில் உள்ள பாராக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரிடம் காரை நிறுத்தும் படி கூறியுள்ளார்.
இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய ஜோ பைடன் சாலை ஓரத்தில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்து அங்கிருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
அதன்பிறகு இரண்டு கையில் இரண்டு ஐஸ்கிரீமை வாங்கி கொண்டு சாலை ஓரத்தில் நின்று சுவைத்து கொண்டிருக்கும் காட்சியானது இணையத்தை தீயாய் பரவி வருகின்றது.
Ice cream. pic.twitter.com/P84JGtxtbk
— Jeff Mason (@jeffmason1) January 25, 2022
இதை பார்த்த மக்கள் வயது ஆன பிறகும் சின்ன குழந்தை போல் ஐஸ்கீரிம் சாப்பிடுவதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.