ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே வாக்களித்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஜனாதிபதி தேர்தல்
நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திங்களன்று முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களித்துள்ளார்.
வாக்கினை பதிவு செய்த ஜோ பைடன்
அவர் தனது சொந்த மாநிலமான Delawareயில் உள்ள New Castleயில் மக்களுடன் இணைந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
பைடன் வரிசையில் நின்றிருந்தபோது வாக்காளர்களுடன் உரையாடியதுடன், சக்கர நாற்காலியில் வந்த வயதான பெண்ணொருவர் வாக்களிக்க உதவி செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |