இலங்கை ஜாம்பவானின் பிரமாண்ட சாதனையை தகர்த்த ஜோ ரூட்! பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 35வது சதத்தை பதிவு செய்தார்.
பென் டக்கெட் 84
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
அணித்தலைவர் ஓலி போப் டக்அவுட் ஆகி வெளியேற, ஜக் கிராவ்லே 78 (85) ஓட்டங்கள் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து பென் டக்கெட் 84 (75) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
ஜோ ரூட் சாதனை
பின்னர் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் (Joe Root) சதம் அடித்தார். இது அவரது 35வது டெஸ்ட் சதம் ஆகும்.
இதன்மூலம் டெஸ்டில் அதிக சதம் விளாசிய இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே, பிரைன் லாரா, யூனிஸ் கான் மற்றும் கவாஸ்கர் ஆகியோரை முந்தினார்.
இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ள நிலையில் ஜோ ரூட் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 2024யில் அதிக சதங்கள் (5) அடித்த இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸின் சாதனையை ரூட் சமன் செய்தார்.
அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 51
- ஜேக்கியூஸ் கல்லிஸ் - 45
- ரிக்கி பாண்டிங் - 41
- குமார் சங்கக்காரா - 38
- ராகுல் டிராவிட் - 36
- ஜோ ரூட் - 35
- மஹேல ஜெயவர்த்தனே - 34
He keeps on climbing 📈 pic.twitter.com/pcupd52LI8
— England Cricket (@englandcricket) October 9, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |