அவுஸ்திரேலியாவில் ஏன் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை? ஆஷஸ் டெஸ்ட் குறித்து ஜோ ரூட்
அவுஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு சதம் கூட இல்லை
இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் அவுஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவரது அதிகபட்ச ஸ்கோர் 89 ஓட்டங்கள்தான்.
அதிகமாக விரும்பினேன்
இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். ஜோ ரூட் கூறுகையில்,
"அவுஸ்திரேலியாவில் இரண்டு முறை விளையாடியுள்ளேன். இப்போது 150 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளேன். இதற்கு நான் இன்னும் தயாராக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
எனக்கு தனித்து நிற்கும் விடயம் என்னவென்றால், கடந்த இரண்டு முறை நான் அதை (ஒரு சதம்) அதிகமாக விரும்பினேன். அது முக்கியமானவற்றில் இருந்து என்னை விலக்கி வைத்தது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |