இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள்போட்டி: அரைசதம் விளாசிய ரூட், பெத்தேல்
இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் அரைசதம் விளாசினர்.
ரூட், பெத்தேல்
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
England vs Sri Lanka 🇱🇰
— England Cricket (@englandcricket) January 27, 2026
1️⃣ ODI: 61
2️⃣ ODI: 75
3️⃣ ODI: 50*
Joe Root is a different breed 😫 pic.twitter.com/1suBWOKrYi
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. பென் டக்கெட் 7 ஓட்டங்களிலும், ரெஹான் அஹமது 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல் இருவரும் நங்கூர கூட்டணி அமைத்தனர். நிதானமாக ஆடிய ஜோ ரூட் (Joe Root) நடப்பு தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell) அரைசதம் கடந்தார். இந்தக் கூட்டணி 124 பந்துகளில் 126 ஓட்டங்கள் குவிக்க, பெத்தேல் 65 (72) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
Jacob Bethell now joins Rooty in going past 50 🤝 pic.twitter.com/X6LDUNUF0S
— England Cricket (@englandcricket) January 27, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |