ஹாக்கி ஸ்டைலில் சிக்ஸர் அடித்த ஜோ ரூட்! மலைத்து போய் நின்ற வீரரின் வீடியோ
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில், இங்கிலாந்தின் ஜோ ரூட் அடித்த சிக்ஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அவர் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
நியூசிலாந்து வீரர் வாக்னர் வீசிய ஓவரில், ஜோ ரூட் திரும்பி நின்று ஹாக்கி விளையாட்டை போல சிக்ஸர் விளாசினார். இப்படி ஒரு ஷாட்டை பந்துவீச்சாளர் எதிர்பார்க்காததால் மலைத்துப்போய் நின்றார்.
ஆனால் இங்கிலாந்து ரசிகர்கள் ஜோ ரூட்டை ஆரவாரம் செய்து கொண்டாடினர். ரூட் 80 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் விளாசி 55 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
Joe Root. You are ridiculous.
— England Cricket (@englandcricket) June 26, 2022
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
??????? #ENGvNZ ?? pic.twitter.com/0YIhsZ5T04