ஜாம்பவான்கள் டிராவிட், பாண்டிங்கின் இமாலய சாதனையை முறியடித்த ஜோ ரூட்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் இமாலய சாதனை ஒன்றை படைத்தார்.
ஹாரி புரூக் சதம்
நாட்டிங்காமில் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகின்றது.
மேற்கிந்திய தீவுகள் 457 ஓட்டங்கள் எடுத்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.
பென் டக்கெட் (Ben Duckett) 76 ஓட்டங்களும், ஓலி போப் (Ollie Pope) 51 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கைகோர்த்த ஹாரி புரூக், ஜோ ரூட் கூட்டணி 189 ஓட்டங்கள் குவித்தது. சதம் விளாசிய ஹாரி புரூக் (Harry Brook) 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Test 5️⃣0️⃣ number ????? ????? for Joe Root ? pic.twitter.com/hOV6bXaXmN
— England Cricket (@englandcricket) July 21, 2024
ஜோ ரூட் (Joe Root) 63வது அரைசதம் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய ஆலன் பார்டர், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார்.
அதிக அரைசதம் விளாசியவர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 68
- சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்) - 66
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 63
- ஆலன் பார்டர் (அவுஸ்திரேலியா) - 63
- ராகுல் டிராவிட் (இந்தியா) - 63
- ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 62
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |