சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட்
joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ரூட்
எட்ஜ்பாஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்த போட்டியில் 69 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் (Joe Root), சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்று அடித்த அரைசதம் மூலம், ஜோ ரூட்டின் டெஸ்ட் அரைசதங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது ஜோ ரூட் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின்ஷிவ்நரைன் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 3வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், இந்தியாவின் ராகுல் டிராவிட் தலா 63 அரைசதங்களுடன் அடுத்தத இடங்களில் உள்ளனர்.
இதே போல், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட்டில் அதிகபட்ச ஓட்டங்கள் வைத்துள்ள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தற்போது 14,278 ஓட்டங்களை குவித்துள்ள ஜோ ரூட்டிற்கு இந்த சாதனையை முறியடிக்க 1,643 ஓட்டங்களே தேவைப்படுகிறது.