தொடர் நாயகன் விருதை வென்ற இரு அணி வீரர்கள்!
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணியின் வீரர்களும் தொடர் நாயகன் விருதை வென்றனர்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடந்தது.
லீட்ஸில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 329 ஓட்டங்களும், இங்கிலாந்து 360 ஓட்டங்களும் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 326 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஓலி போப் 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் கைகோர்த்த ஜோ ரூட் (86), ஜானி பேர்ஸ்டோவ் (71) ஆகியோர் அபாரமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-0 என தொடரை கைப்பற்றி, நியூசிலாந்தை வாஷ்அவுட் செய்தது.
PC: Twitter (@BLACKCAPS)
ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் ஜேக் லீச் வென்றார். நியூசிலாந்து அணியில் தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் மிரட்டிய டேரல் மிட்செல் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய இருவரும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினர்.
PC: Getty Images