தவறவிட்டு லாவகமாக கேட்ச் செய்த விக்கெட்கீப்பர்! அதிர்ச்சியுடன் வெளியேறிய ரூட் (வீடியோ)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட் ஆன விதம் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டி
லீட்ஸில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
That's some catch 👏
— England Cricket (@englandcricket) September 2, 2025
Root falls to Rickelton's grab 🤲
🏴 #ENGvSA 🇿🇦 pic.twitter.com/phUds32FZo
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்ய இங்கிலாந்து அணி களமிறங்கியது.
டக்கெட் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 3 பவுண்டரிகளை விரட்டினார். அவர் 14 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆன விதம் அவருக்கு ஏமாற்றமளித்தது.
ஜோ ரூட் ஏமாற்றம்
லுங்கி இங்கிடி வீசிய பந்து ரூட்டின் துடுப்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதனை முதலில் கேட்ச் செய்து தவறவிட்ட ரிக்கெல்டன், பின்னர் துரிதகதியில் தரையில் பந்துபடும் முன்பு பற்றிக் கொண்டார்.
இது ஜோ ரூட்டிற்கு (Joe Root) ஏமாற்றத்தை அளிக்க அதிர்ச்சியுடன் பெவிலியன் திரும்பினார்.
தற்போதுவரை இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |