டெஸ்டில் 13,000 ஓட்டங்கள்! வரலாறு படைத்த வீரர்..ஒரே நாளில் 498 ரன் குவித்த இங்கிலாந்து
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து 498 ஓட்டங்கள் குவித்தது.
கிராவ்லே, டக்கெட்
இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்பே அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.
ஜக் கிராவ்லே, பென் டக்கெட் கூட்டணி ஜிம்பாப்பே பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட் (Ben Duckett) தனது 5வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 134 பந்துகளை எதிர்கொண்ட டக்கெட், 2 சிக்ஸர் மற்றும் 20 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் விளாசினார்.
Third Test innings at Trent Bridge, third Test fifty at Trent Bridge 👏@BenDuckett1 | @IGcom pic.twitter.com/WuF8oy9gRA
— England Cricket (@englandcricket) May 22, 2025
முதல் விக்கெட்டுக்கு இங்கிலாந்து 231 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஓலி போப் (Ollie Pope) களமிறங்க, கிராவ்லேவும் சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 368 ஆக உயந்தபோது கிராவ்லே 124 ஓட்டங்களில் ரஸா ஓவரில் lbw ஆகி வெளியேறினார்.
எனினும் போப் சரவெடியாய் பவுண்டரிகளை விரட்டி 8வது சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட் தனது பங்குக்கு 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட் சாதனை
இதன்மூலம் அவர் டெஸ்டில் 13,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஜோ ரூட் (Joe Root) ஆவார்.
ஒட்டுமொத்த அரங்கில் ரூட் 5வது இடத்தில் உள்ளார். அவருக்கு முன் ராகுல் டிராவிட் (4), ஜேக் கல்லிஸ் (3), ரிக்கி பாண்டிங் (2), சச்சின் டெண்டுல்கர் (1) ஆகியோர் உள்ளனர்.
Joe Root becomes just the fifth player to score 1️⃣3️⃣,0️⃣0️⃣0️⃣ Test runs 🤩 pic.twitter.com/4yKUJlX5Lz
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 22, 2025
நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 498 ஓட்டங்கள் குவித்திருந்தது. ஓலி போப் ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களுடனும், ஹாரி புரூக் 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து முதல் நாளில் குவித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2022யில் இங்கிலாந்து 506 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |