ஜோ ரூட் செய்த தவறால் அவுட்டிலிருந்து தப்பிய ரோகித்: தலையில் கையை வைத்த பயிற்சியாளர்: வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டை விட்டுவிட்டுவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 25-ஆம் திகதி துவங்கிய இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 78 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து 354 ஓட்டங்கள் இந்திய பின் தங்கியிருந்ததால், இந்தியா இன்னிங்ஸ் தோல்வியடைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கோஹ்லி 45 ஓட்டங்களுடனும், புஜாரா 91 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா அரைசதம் அடித்து 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார்.
Joe Root ran out of time for the LBW apeal and in the end it was hitting the stumps. Chris Silverwood reaction tells all about the importance of Rohit's wicket. pic.twitter.com/pVQk8KmCH5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 27, 2021
ஆனால், இந்த இரண்டாவது இன்னிங்ஸின் 31.5 ஓவரின் போது ராபின்சன் வீசிய பந்தை ரோகித் தடுத்து ஆட முற்பட்டார். ஆனால், பந்தானது அவரது கால்காப்பில் பட்டதால், ராபின்சன் உடனடியாக நடுவரிடம் அவுட் கேட்டார்.
நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால், கேப்டன் ஜோ ரூட் சக வீரர்களிடம் ஆலோசித்து விட்டு ரெவியூக்கு செல்லலாம் என்று கேட்ட போது, ரிவ்யூவுக்கான 15 நொடிகள் முடிந்த பின்பு, அவர் கேட்டதால், நடுவர்கள் டி.ஆர்.எஸ். முடிவை ஏற்கவில்லை.
ஒருவேளை அந்த 15 நொடிகளுக்குள் ரூட் டிஆர்எஸ் கேட்டிருந்தால் ரோகித் வெளியேறி இருப்பார் ரீபிளேவில் பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவாக தெரியவந்தது.
Replays show that the ball was hitting, with three reds lighting up. #RohitSharma #ENGvIND pic.twitter.com/WfffFe5uwg
— CricketTimes.com (@CricketTimesHQ) August 27, 2021
இதன்காரணமாக அதிர்ஷ்டவசமாக அந்த விக்கெட்டிலிருந்து தப்பிய ரோகித் பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக இங்கிலாந்து மண்ணில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.