நிர்வாணமாக ஓடுவேன் என சவால்விட்ட வீரர்..சதமடித்து காப்பாற்றிய ஜோ ரூட்
நிர்வாணமாக ஓடுவேன் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சவால்விட்ட நிலையில், காபாவில் ஜோ ரூட் சதம் அடித்து முடித்து வைத்துள்ளார்.
ஜோ ரூட் சதம்
காபாவில் இன்று தொடங்கிய ஆஷஸ் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் விளாசினார்.
இது அவரது 40வது சதம் என்பதன் மூலம் பல சாதனைகளை படைத்தார். 
அதிலும் குறிப்பாக, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனின் (Matthew Hayden) மானத்தையும் காப்பாற்றியுள்ளார்.
நிர்வாணமாக ஓடுவேன் என சவால்
அதாவது, ஆஷஸ் டெஸ்டில் ரூட் சதம் அடிக்காவிடில் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சவால் விட்டிருந்தார்.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக, ஆஷஸ் டெஸ்ட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில்தான் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 202 பந்துகளில் 135 ஓட்டங்கள் விளாசி ஹைடனின் கூற்றை நனவாக்கியுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |