சதம் அடிக்க விடாத வீரர்: வருத்தப்படாமல் ஜோ ரூட் கூறிய விடயம்
சதம் அடிப்பதை விட வெற்றி பெறாமல் போயிருந்தால்தான் வருத்தப்பட்டிருப்பேன் என ஜோ ரூட் தெரிவித்தார்.
இங்கிலாந்து வெற்றி
கார்டிஃப்பில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் (Joe Root) ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இப்போட்டியில் ஜோ ரூட்டிற்கு சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், அட்கின்ஸன் (Atkinson) அதிரடியாக 23 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
ஜோ ரூட்
நான்கு விக்கெட்டுகள் மற்றும் 6 ஓவர்கள் வரை மீதி இருந்தும், அட்கின்சனின் செயலால் ஜோ ரூட் துடுப்பாட்டத்தின் மறுமுனையிலேயே கடைசி வரை இருந்தார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
ஆனால், சதம் அடிக்க முடியாமல் போனதால் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் தோற்றிருந்தால் அது மிகவும் மோசமான உணர்வாக இருந்திருக்கும். வெற்றி பெறுவதற்காகத்தான் விளையாடுகிறோம். லார்ட்ஸில் வெற்றி பெறுவது மற்றும் உலகின் முதல் அணியை வீழ்த்துவதற்கான வாய்ப்பு ஆகியவை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |