கோஹ்லியின் த்ரோவால் ஒரு நிமிடம் கதிகலங்கி போன ஜோ ரூட்! கமெராவில் பதிவான காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கோஹ்லியின் த்ரோ ஒன்று ஜோ ரூட்டை சற்று நேரத்தில் கதிகலங்க வைத்துவிட்டது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இந்திய அணி ரிஷப் பாண்ட்டின் அதிரடி சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின்(96 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தால், 365 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் 160 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் போது ஆப் திசையில் பீல்டிங் நின்று கொண்டிருந்த கோஹ்லி பந்தை பிடித்து, விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட்டிடம் வீச, ஆனால் ரிஷப் பாண்ட் அதை பிடிக்க தவறியதால் எதிர்பார்தவிதமாக அது ஜோ ரூட் மீது பட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காது ரூட், சில நிமிடத்தில் கதிகலங்கிவிட்டார்.
அதன் பின் கோஹ்லி, ரூட் இருவரும் சிரித்து கொண்டே சென்று விட்டனர். ஆனால், ரசிகர்கள் அந்த வீடியோவை வைத்து பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
??#INDvENG https://t.co/bloaInF27E
— CricTracker (@Cricketracker) March 6, 2021