100 பந்துகள் தொடரில் ருத்ர தாண்டவமாடும் ரூட்
வெல்ஷ் ஃபையர் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ஜோ ரூட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஜோ ரூட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக நங்கூரம்போல் நின்று ஓட்டங்களை குவிப்பவர் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (Joe Root).
ஆனால், 100 பந்துகள் தொடரில் (The Hundred) ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 21ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், ஜோ ரூட் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார்.
ஆட்ட நாயகன்
அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த வெல்ஷ் ஃபையர் (Welsh Fire) அணிக்கு எதிரான போட்டியில், ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஜோ ரூட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும், நடப்பு தொடரில் ஜோ ரூட்டின் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 5 வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |