இந்த இந்திய வீரர் கிட்ட களத்தில் வம்புக்கு போகாம இருந்தாலே நாங்க ஜெயிச்சிடுவோம்! மனதில் இருப்பதை பேசிய ஜோ ரூட்
விராட்கோலி உலகின் தலைசிறந்த வீரர் எனவும் அவரை சீண்டாமல் இருந்து அமைதியாக விளையாட வைத்தாலே நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் திகதியான நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இந்த போட்டி குறித்து பேசிய இங்கிலாந்தின் ஜோ ரூட், அஷ்வின் எவ்வளவு சிறப்பான பந்து வீச்சாளர் என்பது எங்களுக்கு தெரியும். அவருக்கு எதிராக நாங்கள் விளையாட தயாராகி உள்ளோம்.
அதேபோன்று மூன்றாவது போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு எங்களது பந்து வீச்சாளர்கள் தான் முக்கிய காரணம்.
விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை சீண்டாமல் இருப்பது நல்லது அவரை ஆக்ரோசப்படுத்தாமல், அமைதியாக விளையாட வைத்தாலே நாங்கள் வெற்றி பெறுவோம்.
அதுமட்டுமின்றி நான்காவது போட்டியை வெற்றிபெறும் பட்சத்தில் தொடரையும் எங்களால் வெல்ல முடியும் என கூறியுள்ளார்.