கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்... ஜோ ரூட் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் இங்கிலாந்து ரசிகர்கள்
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக அதிக போட்டியில் விளையாடிவர் மற்றும் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்து ஜோ ரூட் கூறியதாவது,கரீபியன் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும், சிந்திக்க நேரம் கிடைத்தது, இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இழந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது.
மேலும் தொடர்ந்த ரூட், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் சவாலான முடிவு இது. ஆனால், எனது குடும்பம் மற்றும் நெருங்கியவர்களுடன் ஆலோசித்த பிறகு, கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு இது சரியான நேரம் என முடிவு செய்தேன்.
எனது நாட்டிற்கு கேப்டனாக இருந்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது நாட்டை கேப்டனாக வழிநடத்துவதை நான் விரும்பினேன், ஆனால் சமீபத்தில் அது எனக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் விளையாட்டையும் தாண்டி அது என் மீது எத்ததைய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரஷ்யாவில் கேட்ட பயங்கர வெடி சத்தம்.. பீதியில் மக்கள்! வெளியான வீடியோ
Thank You, @root66 ❤️
— England Cricket (@englandcricket) April 15, 2022
இந்த தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கிலாந்து அணியை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அந்த அணி வெற்றிபெற உதவும் அடுத்த கேப்டன், எனது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு என்னால் இயன்ற உதவியை அளிக்க நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் திடீரென அறிவித்துள்ளது, இங்கிலாந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.