மிகப் பெரிய அவமானம்! இந்தியாவுடன் மோசமான தோல்விக்கு பின் வெளிப்படையாக பேசிய ஜோ ரூட்
இந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரண்டே நாளில் முடிந்த நிலையில், அது குறித்து ஜோ ரூட் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது.
உலகின் மிகப் பெரிய மைதனம் என்பதால், ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்திற்கு வந்தனர். ஆனால் போட்டி இரண்டே நாளில் முடிந்துவிட்டது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜோ ரூட் கூறுகையில், மைதானம் மிகப்பெரிய அவமானம். ஆட்டத்தை நேரில் காண 40,000 ரசிகர்கள் திரண்டிருந்தார்கள்.
ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டியை நேரில் காணப்போகிறோம் என்று வந்த அவர்களை ஏமாற்றியது மிகவும் வருத்தமாக உள்ளது.
ஆண்டர்சனின் பந்தை விராட் கோஹ்லி எப்படி எதிர்கொள்வார், ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துகளை எப்படி பென் ஸ்டோக்ஸ் எதிர்த்து ஆடுவார் எனப் பல கனவுகளோடு போட்டியை பார்க்கவந்தவர்களை இந்த மைதானம் ஏமாற்றியிருக்கிறது.
நீங்கள் இஷாந்த் ஷர்மாவின் 100-வது டெஸ்ட் போட்டியின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிட்டீர்கள். ஒரு சில ஓவர்களே அவர் பந்துவீசினார். ரசிகர்கள் திருடப்பட்டுவிட்டதாக நான் உணர்கிறேன். பும்ரா, இஷாந்த், ஆண்டர்சன், பிராட், லீச் என முக்கிய வீரர்களின் பந்துவீச்சையெல்லாம் பார்க்கவந்தவர்கள் என்னுடைய பந்து வீச்சை பார்க்கவேண்டிய துரதிஷ்ட நிலைக்குத்தள்ளப்பட்டார்கள் என்று கூறினார்.