ஒவ்வொரு அடியிலும் உங்களுக்காக இருப்பேன் நண்பா.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டனுக்கு ஜோ ரூட் வாழ்த்து
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸுக்கு முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உருக்கத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 0-4 என அவுஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கியது. அதனைத் தொடர்ந்து அணித்தலைவர் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார்.
இந்த நிலையில் 30 வயதான ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டோக்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
'எப்போதும் ஒருவருக்கு பின் ஒருவர் துணை நின்றிருக்கிறோம். வாழ்த்துக்கள் நண்பா, நீ அடியெடுத்து வைக்கும் வழியில் நான் உன்னுடன் இருப்பேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Always got each other’s backs. Congratulations mate, I’ll be right with you every step of the way ❤️ pic.twitter.com/KqO3mZpd9X
— Joe Root (@root66) April 28, 2022
இதே போல், ஒரு நம்ப முடியாத கௌரவம் என்றும், இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரையும் நீங்கள் பெருமைப்படுத்துவீர்கள் என்றும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் தனது வாழ்த்துக்களை ஸ்டோக்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5061 ஓட்டங்களும், 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 258 ஓட்டங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.