அதிக டெஸ்ட் அரை சதம் - சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்
joe root equal sachin record most test half century: அதிக டெஸ்ட் அரை சதம் அடித்துள்ள சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்
இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் காக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட மூவரும் அரைசதம் அடித்தனர்.
66 ஓட்டங்களை குவித்த ஜோ ரூட்டிற்கு இது 68வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
278 இன்னிங்ஸில் சச்சின் செய்த சாதனையை, ஜோ ரூட் 264 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |