ஒன்றரை ஆண்டுக்கு பின் இங்கிலாந்து திரும்பும் அபாயகரமான வீரர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்ட இடைவெளிக்கு பின் இடம்பிடித்துள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். மிரட்டலாக பந்துவீசக்கூடிய இவர் இக்கட்டான சூழலில் சிக்ஸர்களை விளாசி அணியை மீட்பதிலும் வல்லவர்.
@GRAHAM HUNT
27 வயதாகும் ஆர்ச்சருக்கு முழங்கையில் அழுத்த முறிவு ஏற்பட்டது. மேலும் முதுகில் எலும்பு முறிவு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் என உடலளவில் மூன்று பிரச்சனைகளை சந்தித்தார்.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. அத்துடன் மருத்துவ ஓய்வும் தேவை என்பதால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
@AFP
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களம்
இந்த நிலையில் 21 மாதகாலத்திற்கு பிறகு ஆர்ச்சர் உடல்தகுதியுடன் திரும்பியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார்.
ஜனவரி மாதம் நடக்கும் இந்தத் தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டேவிட் வில்லி, டாப்லே, வோக்ஸ், ஸ்டோன் ஆகிய பந்துவீச்சாளர்களுடன் ஜோஃப்ரா ஆர்ச்சரும் விளையாட உள்ளார்.
@ECB Images
Look who's back ?
— ICC (@ICC) December 22, 2022
ICYMI: England have named a strong side for their upcoming CWCSL assignment against South Africa.
Details ? https://t.co/CEMVYR8zNI pic.twitter.com/dUmuUwKAF4