சாம்பியன்ஸ் டிராஃபியில் ஜாம்பவானின் 21 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஆர்ச்சர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் ஜோஃப்ரா ஆர்ச்சர் புதிய சாதனை படைத்தார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் அபார பந்துவீச்சு
சாம்பியன்ஸ் டிராஃபியின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் (Afghanistan) துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 6 (15) ஓட்டங்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அடல் (4) மற்றும் ரஹ்மத் ஷா (4) ஆகியோரும் ஆர்ச்சரின் மிரட்டலான பந்துவீச்சில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
21 ஆண்டுகால சாதனையை முறியடிப்பு
அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஆர்ச்சர் ஒருநாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை கடந்தார்.
மேலும், அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை முறியடித்தார். ஆண்டர்சன் 2004ஆம் ஆண்டில் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ஆர்ச்சர் 30 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் ஸ்டீவ் ஹார்மிசன் (32), ஸ்டீவன் ஃபின் (33), டேரன் கௌக் (34), ஸ்டூவர்ட் பிராட் (34) ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |