சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தாகவேண்டும்: ட்ரம்பின் முன்னாள் அலுவலர் வலியுறுத்தல்
சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தாகவேண்டும் என ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தாகவேண்டும்
ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அலுவலரான ஜான் போல்ட்டன் (John Bolton), சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தாகவேண்டும் என்று கூறியுள்ளார்.
நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜான் போல்ட்டன், நான் சுவிட்சர்லாந்தின் அரசியல் விவாதங்களில் தலையிட விரும்பவில்லை.
ஆனாலும், சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்பில் இணைவதுதான் நல்லது என நான் நம்புகிறேன்.
புதிய புவிசார் அரசியல் சூழலில், நடுநிலைமைக்கு எதிர்காலம் இல்லை என நான் கருதுகிறேன்.
ஸ்வீடனும் பின்லாந்தும்கூட தங்கள் நடுநிலைத்தன்மையை விட்டுக்கொடுத்துவிட்டன. ஏனென்றால், நேட்டோ எல்லைக்குள் இருப்பது மட்டுமே பாதுகாப்பு என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் ஜான் போல்ட்டன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |