22 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட வீரர்; இந்தியாவிற்கு எதிராக அதிரடி சதமடித்த ஜான் கேம்பெல்
john campbell century vs india in 2nd odi after 22 months ban: ஜான் கேம்பெல், இந்தியாவிற்கு எதிராக அதிவேக சதமடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஜான் கேம்பெல் அதிரடி சதம்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்று வரும் 2வது ODI போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பெல் அதிரடியாக ஆடி 68 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 101 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இது மேற்கிந்திய தீவுகள் வீரர், இந்தியாவிற்கு எதிராக அடித்த அதிவேக ODI சதம் ஆகும்.
ஜான் கேம்பெல், கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் 4 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார்.
மேல்முறையீடு செய்த பின்னர் அந்த தடை 22 மாதங்களாக குறைக்கப்பட்டு, தற்போது விளையாடி வருகிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணி, 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.