கடும் கொந்தளிப்பில் விவசாயிகள்... John Deere டிராக்டர்களை புறக்கணிக்க முடிவு
அமெரிக்காவில் John Deere நிர்வாகத்தின் முடிவால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த நிறுவன டிராக்டர்களை வாங்குவதை நிறுத்துவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுவரை 2,100 ஊழியர்கள்
கடந்த 187 ஆண்டுகளாக செயல்படும் John Deere நிறுவனம் வேளாண் தொடர்பான இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரிப்பதில் முன்னிலையில் உள்ளது.
ஆனால் புதன்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது தொடரும் என்றே John Deere குறிப்பிட்டுள்ளது. அயோவா மற்றும் இல்லினாய்ஸில் கிட்டத்தட்ட 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள John Deere நிர்வாகம்,
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 2,100 ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளது. அதே வேளை தங்கள் தொழிற்சாலையை அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோவிற்கு இடம் மாற்றும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையிலேயே வேளாண் மக்கள் John Deere டிராக்டர்கள் அல்லது அதன் தயாரிப்புகள் எதையும் இனி வாங்குவதில்லை என மிரட்டல் விடுத்துள்ளனர். John Deere நிறுவன தயாரிப்புகள் குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்க சந்தையில் முன்னணியில் உள்ளது.
பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் வேளாண் மக்களால் நம்பி வாங்கப்படுகிறது. ஆனால் தற்போது John Deere நிறுவனம் மெக்ஸிகோவிற்கு இடம்பெயற்வதற்கு காரணமும் இந்த அமெரிக்க ஊழியர்கள் என்றே கூறப்படுகிறது.
டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்
John Deere நிறுவனத்தின் இந்த முடிவு சில அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் பரப்புரையின் போது John Deere நிற்வாகத்தின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள டொனால்டு ட்ரம்ப், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி வரியை 200 சதவிகிதமாக அதிகரிப்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் John Deere நிறுவனம் இரு மாகாணங்களிலும் சுமார் 22,600 சம்பளம் பெறும் உற்பத்தித் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டது.
ஆனால் 2023 மற்றும் 2024ல் விற்பனை 20 சதவிகிதம் வரையில் சரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. 2023ல் மட்டும் 10 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ள John Deere நிறுவனம், மேலும் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |