பிரபல நடிகரின் மூன்று ஆண்டுகால அவதூறு வழக்கு! முன்னாள் மனைவி 15 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டேப் தொடர்ந்த வழக்கில் அவரது முன்னாள் மனைவி அம்பர் ஹெர்ட்டுக்கு 15 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்து பிரபலமானவர் ஜானி டெப். இவர் தன்னை விட 22 வயது குறைவான நடிகை அம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் ஒன்றரை ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த கட்டுரை ஒன்றை அம்பர் எழுதினார். அதில் ஜானி டெப்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் வகையில் குறிப்பிட்டிருந்ததால் ஜானியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது.
இதனால் அம்பர் மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தங்கள் துணை மீது வைத்தனர். அந்த குற்றச்சாட்டுகளில் உடல் ரீதியான, பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக அம்பர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Photo Credit: Neil Hall/EPA
அதே போல், தனது மனைவி தன்னை பலமுறை தாக்கியதாக ஜானி டெப் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் இந்த வழக்கு மிகவும் பரபரப்பானது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் நடந்த விசாரணையின் முடிவில், ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Photo Credit: Michael Reynolds/Pool Photo via AP
தனது முன்னாள் கணவர் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளை ஜானி டெப் வழக்கறிஞர் புரளி என்று கூறி வாதிட்டதால், தன்னை அவதூறு செய்ததாக அம்பர் கூறினார். எனவே நடுவர் மன்றம் அம்பருக்கு 2 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கியது.
இதற்கிடையில், உண்மை ஒருபோதும் வீழ்ந்ததில்லை என்றும், தன் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாகவும் ஜானி டெப் குறிப்பிட்டுள்ளார்.