பிரதமர் போரிஸ் ஜோன்சனை விவகாரத்து செய்தது ஏன்? உண்மையை உடைத்த இரண்டாவது மனைவி
போரிஸ் ஜோன்சன் மூன்றாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரின் இரண்டாவது மனைவி அவரை விவாகரத்து செய்து கொண்டதன் காரணத்தை கூறியுள்ளார்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும், அவரது காதலியான கேரி சைமண்ட்ஸ்க்கு வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கதீட்ரலில் சில தினங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணமாக நடந்தது.
இந்த திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இந்நிலையில், போரிஸ்ஜோன்சனுக்கு இது மூன்றாவது திருமணம். அவர் ஏற்கனவே Allegra Mostyn-Owen என்பவரை 1987-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 1993-ல் பிரிந்தார்.
இதைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு Marina Wheeler(56) என்பவரை போரிஸ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர்களுக்கிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட, அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இதன் பின்னரே இப்போது போரிஸ் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட Marina Wheeler , கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய்க்கு பரிசோதனை செய்யுமாறு பெண்களை வலியுறுத்தினார். அது தொடர்பாக பேசிய போது, அவர் தன்னுடைய 25 ஆண்டுகால திருமண முடிவுக்கு வர காரணத்தையும் கூறினார்.
என் திருமண வாழ்க்கைக்கான திட்டம் மோசமாக மாறிவிட்டது. நானும், என் குழந்தைகளும் சில கடினமான விஷயங்களை பார்க்க வேண்டியிருந்தது. இதனால் நான் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தேன், என் திருமண வாழ்க்கை சத்தியமற்றதாகிவிட்டது, இதை மட்டுமே தற்போது கூற முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு Marina Wheeler-க்கு கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.