அந்த கட்சியில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி வந்திருக்கும்.., சீமான் வெளிப்படை பேச்சு
பாஜகவில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
சீமான் பேசியது..
மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து சீமான் நேற்று பேசினார்.
அப்போது அவர், "எந்த தேசத்திலாவது மதுவை அரசு விற்கிறதா, கல்வி நிலையங்களையும், நோய் நீக்கும் மருத்துவமனைகளையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு அறிவை அழிக்கும் மதுவை அரசு விற்கிறது.
பாஜகவினர் வந்து என்னிடம் எவ்வளவோ பேசினார்கள். அவர்களது கட்சியில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும்.
டிடிவி தினகரனும், ஜி.கே.வாசனும் பாஜகவில் சேர்ந்ததால் அவர்களது சின்னம் கிடைத்துவிட்டது. நாங்கள் சேராததால் எங்களது சின்னம் கிடைக்கவில்லை.
பாஜகவின் கட்சி அலுவலகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள், எங்களுக்கு நீங்கள் வாக்களிக்காவிட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |