பொல்லார்டை குழந்தை போல் கட்டியணைத்துக் கொண்ட முன்னாள் வீரர்! உருக்கமான பதிவு
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பொல்லார்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பீல்டிங் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் வீரர் ஜான்டி ரோட்ஸ். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ரோட்ஸ் 245 ஒருநாள் போட்டிகளில் 105 கேட்ச்களை பிடித்தவர். இவர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கீரன் பொல்லார்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரோட்ஸ் ஒரு குழந்தை போல பொல்லார்டை கட்டியணைத்து கொண்டுள்ளார்.
Am always so grateful for the amazing people that cricket has brought into my life. @KieronPollard55 is a giant of the game, and not just because I fit under his chin, but because he has had such a positive impact on the game itself, and also on all his teammates. #legend pic.twitter.com/7YNMHOFq2n
— Jonty Rhodes (@JontyRhodes8) May 2, 2022
மேலும், 'என் வாழ்க்கையில் கிரிக்கெட் கொண்டு வந்த அற்புதமான மனிதர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கீரன் பொல்லார்டு விளையாட்டின் மாபெரும் ஆளுமை.
நான் அவரது கன்னத்தின் கீழ் பொருந்தியதால் மட்டும் இதை கூறவில்லை. அவர் விளையாட்டின் மீதும், அவரது சக வீரர்கள் மீதும் அத்தகைய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாலும் தான்' என அதனுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜான்டி ரோட்ஸ்(52) தன்னை விட 18 வயது இளையவரான பொல்லார்டை(34) இவ்வாறு புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.