பிரான்சின் அடுத்த ஜனாதிபதி இவர்தான்? மக்களிடையே அமோக ஆதரவு பெற்று வரும் இளம் தலைவர்
பிரான்சின் அடுத்த ஜனாதிபதி இவராக இருக்கக்கூடும் என கணிக்கும் அளவுக்கு மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்றுவருகிறார் இளம் தலைவர் ஒருவர்.
பிரான்சின் அடுத்த ஜனாதிபதி இவராக இருக்கலாம்

பிரான்ஸ் மக்களிடையே, குறிப்பாக, இளம் தலைமுறையினரிடயே அமோக ஆதரவைப் பெற்றுவரும் அந்த தலைவர், ஜோர்டன் பார்டெல்லா.
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் ஜோர்டனை பின்தொடர்பவர்கள் 1.2 பில்லியன் பேர். டிக்டாக்கில் அவரை பின்தொடர்பவர்கள் 2.2 பில்லியன் பேர்.
அவர் எங்களைப் பற்றி நினைக்கிறார், அவர் எதிர்கால தலைமுறையினரை நினைக்கிறார், அவர் எங்களுக்காக பல விடயங்களை மேம்படுத்த முயற்சித்துவருகிறார் என்கிறார் ஒரு இளம்பெண்.
எங்களுக்கு அவர் இருக்கிறார் என்னும் உணர்வை அவர் ஏற்படுத்தியுள்ளார், அவர் கூறுவது எல்லாமே நல்லதாகத்தான் இருக்கிறது என்று கூறும் மற்றொரு இளம்பெண், அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வும் உள்ளது என்கிறார்.

ஆனால், இவர்கள் யாருக்குமே இன்னும் ஓட்டுப்போடும் வயது வரவில்லை! என்றாலும், அடுத்த தேர்தலில் அவர்கள் வாக்களிப்பார்கள்.
ஆக, இளம் தலைமுறையினரிடையே ஜோர்டனுக்கு பெரும் ஆதரவு உள்ளது. தன்னுடன் புகைப்படம் எடுக்க நூற்றுக்கணக்கானோர் வந்தாலும், அவர்களுக்காக பொறுமையாக போஸ் கொடுக்கிறார் அவர்.
ஏனென்றால், அவர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் அவருக்கான பிரச்சாரமாகத்தான் அமையும் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால், அவரது கட்சியான National Rally கட்சிக்கு வலதுசாரிக் கட்சி என்னும் முத்திரை உள்ளதால், அவர் ஜனாதிபதியாக மக்களிடையே எதிர்ப்பு உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
ஆகவே, வலதுசாரி ஆதரவாளர்கள் என்னும் முத்திரையை உடைக்கவும் முயற்சி செய்துவருகிறார் அவர்.

பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க எதிர்ப்பு, உக்ரைன் ஆதரவு ஆகிய கொள்கைகள் கொண்ட ஜோர்டனுக்கு இமானுவல் மேக்ரானின் நிர்வாகப் பிரச்சினைகள் கூடுதல் பலத்தைக் கொடுக்கின்றன.
மேக்ரானின் தலைமை மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் அவர்.
ஆக, ஒரு வித்தியாசமான தலைவராக தன்னை மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ள முயலும் ஜோர்டன், அடுத்த தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதியானாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |