கவுண்டி டெஸ்டில் 201 பந்துகளில் 204 ரன் விளாசிய காக்ஸ்
கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் போட்டியில், ஜோர்டன் காக்ஸ் அதிரடியாக 204 ஓட்டங்கள் குவித்தார்.
அதிரடி இரட்டைசதம்
எசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷிரே அணிகளுக்கு இடையிலான கவுண்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கிரேஸ் ரோட்டில் நடந்து வருகிறது.
எசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் ஜோர்டன் காக்ஸ் இரட்டைசதம் விளாச 401 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய ஜோர்டன் காக்ஸ் (Jordan Cox) 201 பந்துகளில் 204 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 26 பவுண்டரிகள் அடங்கும்.
மேத்யூ கிரிட்ச்லே 97 ஓட்டங்களும், டாம் வெஸ்ட்லே 41 ஓட்டங்களும் எடுத்தனர். ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஃபாலோ-ஆன்
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய லீசெஸ்டர்ஷிரே 187 ஓட்டங்களுக்கு சுருண்டு ஃபாலோ-ஆன் ஆனது. நிக் கெல்லி 78 ஓட்டங்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய லீசெஸ்டர்ஷிரே 428 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
லீவிஸ் ஹில் 127 ஓட்டங்கள் குவித்தார். எசெக்ஸ் அணி 215 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |