முதல் சதமே 150 ஓட்டங்கள் விளாசிய 24 வயது வீரர்
Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான ஜோர்டன் ஹெர்மன் 150 ஓட்டங்கள் விளாசினார்.
டோனி டி ஸோர்சி 72
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Windhoek-யில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 10 ஓட்டங்களில் வெளியேற, ஜோர்டன் ஹெர்மன் மற்றும் டோனி டி ஸோர்சி கூட்டணி 190 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் அடித்த டோனி 72 ஓட்டங்களில் வெளியேற, டெவால்ட் பிரேவிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜோர்டன் ஹெர்மன் 150
மறுமுனையில் அதிரடி மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 275 ஓட்டங்களாக உயர்ந்தபோது, ஜோர்டன் ஹெர்மன் 126 பந்துகளில் 150 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
கார்பின் போஷ் அதிரடியாக 24 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 348 ஓட்டங்கள் குவித்தது. ரூபென் ட்ரம்பல்மன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

A Debut For The Books! 📝
— Proteas Men (@ProteasMenCSA) September 9, 2026
Jordan Hermann’s day just keeps getting better as the debutant brings up an extraordinary 150! 🤯
A sensational innings of exquisite stroke play as Hermann makes his mark on the international stage. 🇿🇦🙌#Unbreakable pic.twitter.com/QdNfetlj9F
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |