இந்திய அணிக்கு எதிராக 27வது அரைசதம் விளாசல்! இங்கிலாந்து கேப்டன் பொறுப்பான ஆட்டம்
இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 75 ரன்
நாக்பூரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதலில் களமிறங்கியது.
பிலிப் சால்ட் (Philip Salt) மற்றும் பென் டக்கெட் (Ben Duckett) கூட்டணி 53 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்தது. 26 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் சால்ட் 43 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
பட்லர் அரைசதம்
அடுத்து ராணா ஓவரில் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டக்கெட் ஆட்டமிழக்க, ஹாரி புரூக் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ஜோ ரூட்டை 19 ஓட்டங்களில் ஜடேஜா ஆட்டமிழக்க செய்தார்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெலுடன் கைகோர்த்தார். இவர்களது கூட்டணி 59 ஓட்டங்கள் சேர்க்க, ஜோஸ் பட்லர் (Jos Buttler) தனது 27வது அரைசதத்தை விளாசினார். 67 பந்துகளை எதிரகொண்ட அவர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லிவிங்ஸ்டன் (5), கார்ஸ் (10) வந்த வேகத்தில் நடையை கட்ட, நிலைத்து நின்று ஆடிய ஜேக்கப் பெத்தெல் (Jacob Bethell) அரைசதம் அடித்தார்.
Our boss 👏
— England Cricket (@englandcricket) February 6, 2025
When we need him most...
Match Centre: https://t.co/mjJ55wZD0F
🇮🇳 #INDvENG 🏴 | @josbuttler pic.twitter.com/PyGYEroOXf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |