இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்த பட்லர்-பர்ஸ்டோவ்! அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்று முடிந்த 2 டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி, அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்து வீச்சை தெரிவு செய்ய, இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
இதில் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க, அடுத்து ரோகித் சர்மா 15 ஓட்டங்களிலும், இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் இந்த முறை 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
India set us 157 to win ?
— England Cricket (@englandcricket) March 16, 2021
Scorecard: https://t.co/NrXjjPtpRj
?? #INDvENG ??????? pic.twitter.com/2Q03b1XvzA
அதன் பின் ரிஷப் பாண்டுடன் ஜோடி சேர்ந்த, கோஹ்லி அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த சிறப்பாக ஆடிக் கொண்டிருக்க, ரிஷப் பாண்ட் தேவையில்லாமல் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் வெளியேற, தனி ஒருவனாக கோஹ்லி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதி வரை கோஹ்லி ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் குவிக்க இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 156 ஓட்டங்கள் எடுத்தது.
157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜோசன் ராய் 9 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.
இதனால் இங்கிலாந்து அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் சென்றது. மூன்றாவதாக வந்த டேவிட் மலான் 18 ஓட்டங்களில் வெளியேற, பட்லருடன் ஜோடி சேர்ந்த பார்ஸ்டவ் இந்திஅய் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.
5⃣0⃣ for @josbuttler! ?
— England Cricket (@englandcricket) March 16, 2021
Off just the 2⃣6⃣ balls ?
Scorecard: https://t.co/Ktho4y7urM
?? #INDvENG ??????? pic.twitter.com/yxzcyZ9OYW
இவர்கள் இருவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 83*(52) ஓட்டங்களுடனும், பர்ஸ்டவ் 40*(28) ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்று முன்னிலை வகிக்கிறது
