ஜோஸ் பட்லர் சரவெடி ஆட்டம்! 246 ரன் இலக்கை 30வது ஓவரிலேயே எட்டிய இங்கிலாந்து
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
ரூதர்போர்டு 70 ஓட்டங்கள்
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கி ஆட மழை குறுக்கிட்டது. இதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
Hands, Harry 👏 pic.twitter.com/XBK0JWNZV3
— England Cricket (@englandcricket) June 3, 2025
ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) அதிரடியாக 71 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி கட்டத்தில் அபாரமாக ஆடிய குடாகேஷ் மோட்டி 54 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளும், மஹ்மூத், கார்ஸ் மற்றும் போட்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
DLS முறைப்படி 246 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
ஜோஸ் பட்லர் அபாரம்
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஜெட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது. ஜேமி ஸ்மித் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து பென் டக்கெட் 46 பந்துகளில் 58 ஓட்டங்களும், ஜோ ரூட் 44 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, ஜோஸ் பட்லர் (Jos Buttler) ருத்ர தாண்டவம் ஆடினார்.
Get there safely in singles? 🤔
— England Cricket (@englandcricket) June 3, 2025
Nah, hit it out the ground to win the game! 💪 pic.twitter.com/2nFa85OpMs
இதன்மூலம் இங்கிலாந்து அணி 29.4 ஓவரிலேயே 3 விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பட்லர் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களும், ஹாரி புரூக் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஜேமி ஸ்மித் ஆட்டநாயகன் விருதையும், ஜோ ரூட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |