பறந்த சிக்ஸர்கள்..தோனியின் சாதனையை அடித்து நொறுக்கிய ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்தின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி முழுவதுமாக வென்றது.
கடைசி போட்டியில் அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், 64 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்காத பட்லர், முதல் போட்டியில் 14 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒரு தொடரில் 19 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
Photo Credit: Twitter
இதற்கு முன்பு 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 17 சிக்ஸர்கள் விளாசியிருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பட்லர் அதனை முறியடித்துள்ளார்.
Photo Credit: GRAHAM CROUCH/Getty Images
இந்த சாதனைப் பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 16 சிக்ஸர்கள் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.