டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த ஜோஸ் பட்லர்! கடின இலக்குடன் வாழ்வா சாவா என ஆடிவரும் இலங்கை
டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடி எல்லாவற்றிலும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இங்கிலாந்து அணியும், 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் அரையிறுதி வாய்ப்பை பெற்றிருக்கும் இலங்கை அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை ஆடியது.
தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை 9 ஓட்டங்களில் ஹசரங்கா வீழ்த்தினார். இதையடுத்து டேவிட் மலானை 6 ஓட்டத்துக்கு சமீரா வீழ்த்த, ஜானி பேர்ஸ்டோவை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார் ஹசரங்கா.
அதனால் 5.2 ஓவரில் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
அதன்பின்னர் நிதானமாக நின்று ஆடவேண்டிய கட்டத்தில், ஜோஸ் பட்லரும் கேப்டனு மோர்கனும் இணைந்து நிதானம் காத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 12-13 ஓவர் வரை நிதானம் காத்த இருவரும் அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினர்.
கடந்த ஓராண்டாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ஒயின் மோர்கன், இந்த போட்டியில் சில பெரிய ஷாட்டுகளை ஆடி ஃபார்முக்கு வந்தார். ஏற்கனவே அருமையான ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர், சின்ன மைதானமான ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார்.
சிறப்பாக அடித்து ஆடிய பட்லர் 66 பந்தில் 95 ஓட்டங்கள் அடித்திருக்க, இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் சதத்தை எட்ட சிக்ஸர் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் துஷ்மந்தா சமீரா பந்தை ஃபுல் டாஸாக வீச, அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டு சதத்தை எட்டினார் பட்லர். டி20 கிரிக்கெட்டில் இதுவே பட்லரின் முதல் சதம்.
பட்லரின் அதிரடி சதத்தில் 101 ஓட்டங்கள் மற்றும் மோர்கனின் பொறுப்பான பேட்டிங்கால் 40 ஓட்டங்கள் என 20 ஓவரில் முடிவில் 163 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில், 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இலங்கைபாடி வருகிறது.