டி20யில் புதிய சாதனை படைத்த சிக்ஸர் மன்னன் பட்லர்
இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் டி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஜோஸ் பட்லர்
டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்று நடந்த போட்டியில், Lancashire அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் Yorkshireஐ வீழ்த்தியது.
Jos Buttler delivers in the Roses clash 💥
— FanCode (@FanCode) July 17, 2025
A composed 77 off 46 helps Lancashire seal the clash by 21 runs 👊#VitalityBlast #LANvYOR #JosButtler pic.twitter.com/n1ahd5Ibt2
இப்போட்டியில் Lancashire வீரர் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் அவர் டி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார்.
சாதனை
இந்த பெருமையை பெற்ற இரண்டாவது இங்கிலாந்து சர்வதேச வீரர் எனும் சாதனையை பட்லர் படைத்தார்.
அத்துடன் ஒட்டுமொத்த அரங்கில் ஜோஸ் பட்லர் (Jos Buttler) 7வது வீரர் ஆவார். இதுவரை 457 போட்டிகளில் 35.74 சராசரியுடன் பட்லர் 13,046 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |