களத்தில் ராஜஸ்தான் வீரர் செய்த காரியம்.. குவியும் பாராட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜாஸ் பட்லர், குஜராத் அணியுடனான போட்டியின்போது செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் ஆரஞ்சு நிற தொப்பியை வைத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் ஹர்திக் பாண்ட்யா 87 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் பட்லரை முந்தினார்.
இதனை அறிந்த பட்லர் களத்தில் இருக்கும்போதே தனது ஆரஞ்சு நிற தொப்பியை கழற்றிவிட்டார். போட்டியின் நடுவே இவ்வாறு செய்ய வேண்டும் என்று எந்த விதியும் இல்லை . ஆனால் தான் முதலிடத்தில் இருந்து இறங்கிவிட்டோம் என தெரிந்ததும் பட்லர் தொப்பியை கழற்றிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
ரசிகர்கள் பட்லரை பாராட்டிய நிலையில், முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது பதிவில் 'ஜாஸ் பட்லர் ஒரு ஜெண்டில்மேன். அவரிடம் இருந்து சக வீரர்கள் கற்று கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டார்.