தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்த இங்கிலாந்து! விரக்தியில் பேசிய கேப்டன்
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறினார்.
தென் அப்பிரிக்கா இமாலய வெற்றி
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது தென் ஆப்பிரிக்கா.
இரு அணிகளும் கடந்த போட்டியில் சிறிய அணிகளுடன் தோல்வியை சந்தித்த நிலையில், நேற்றைய தினம் பலப்பரீட்சை போட்டியாக பார்க்கப்பட்டது.
ஆனால், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து துவைத்து 400 ஓட்டங்கள் வெற்றி இலக்ககாக நிர்ணயித்தனர். கிளாசென் 109 ஓட்டங்களும், ஹென்றிக்ஸ் 85 ஓட்டங்களும், ஜென்சென் 75 (42) ஓட்டங்களும் விளாசினர்.
Amey Mansabdar
கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 22 ஓவர்களிலேயே 170 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
AFP
ஜோஸ் பட்லர்
தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'இது நம்ப முடியாத ஏமாற்றம். நாங்கள் நன்றாக தாக்கப்பட்டோம். எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். முதல் இன்னிங்ஸில் பல விடயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. ரீஸ் காயமுற்றார். ஆனாலும் வீரர்கள் கடுமையாக போராடினர். பிழைகளுக்கு இனி இடமில்லை. இனி வரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |