குமார் சங்கக்காரா என்னிடம் கூறியது, தோனி மற்றும் கோலியைப்போல் செய்தேன்! 55 பந்தில் சதம் விளாசிய பட்லர்
தோனி, கோலி கடைசிவரை வெற்றி பெறுவோம் என நம்புவதுபோல் நானும் அதை முயற்சித்தேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
அதிரடி சதம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் 125 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியபோது, அணியை தூக்கி நிறுத்திய ஜோஸ் பட்லர், அதிரடி சதம் விளாசி ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார்.
An Impactful Innings ?
— IndianPremierLeague (@IPL) April 16, 2024
? class effort from a ? player ft. Jos Buttler
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #KKRvRR | @rajasthanroyals pic.twitter.com/5vz2qLIC7Z
போட்டிக்கு பின்னர் பேசிய ஜோஸ் பட்லர், தனது துடுப்பாட்டம் குறித்து கூறும்போது குமார் சங்கக்காரா, தோனி, கோலி ஆகியோரை குறிப்பிட்டார்.
மேலும் ஜோஸ் பட்லர் கூறுகையில், ''தொடர்ச்சியாக நம்புவது தான் இன்றைய (நேற்று) உண்மையான திறவுகோல். சில சமயங்களில், நான் ரிதத்திற்காக கொஞ்சம் சிரமப்படுவது போல் உணர்ந்தேன். உண்மையில் கோல்ஃப் பார்த்துக் கொண்டிருந்தேன் மற்றும் மேக்ஸ் ஹோம்ஸ் என்ற மனிதனைப் பார்த்தேன்.
நீங்கள் பைத்தியக்காரத்தனமான விடயங்களை ஐபிஎல் முழுவதிலும் பல முறை நடந்துள்ளதைப் பார்த்திருப்பீர்கள். தோனி, கோலி போன்ற வீரர்கள் கடைசிவரை நம்பிக்கை வைத்து ஆடும் விதத்தை IPL கிரிக்கெட்டில் நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள், நானும் அதையே செய்ய முயற்சித்தேன்'' என்றார்.
52வது பிறந்தநாள் கொண்டாடும் முத்தையா முரளிதரனின் சொத்து மதிப்பு: IPLயில் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?
சங்கக்காரா கூறிய விடயம்
அத்துடன், ''குமார் சங்கக்காரா என்னிடம் நிறைய விடயங்களை கூறியிருக்கிறார். எப்போதும் ஒரு சிறிய பிரேக்கிங் பாயிண்ட் உள்ளது. நீங்கள் நன்றாக உணராதபோது, நீங்கள் செய்யக்கூடிய மோசமான விடயம் என்னவென்றால், அதை எதிர்த்துப் போராடுவதுதான்.
அவர் (சங்கக்காரா) என்னை அங்கேயே இருக்க சொல்கிறார், ஒரு கட்டத்தில் வேகம் மாறும் அல்லது ஒரு ஷாட் உங்களை கொண்டு செல்லும். கடந்த சில ஆண்டுகளாக எனது ஆட்டத்தில் இது ஒரு பாரிய பகுதியாகும்.
எந்நேரமும் நீங்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல், குறிப்பாக சேஸிங்கில் இருக்கும்போது கடைசி பந்தில் வெற்றி பெறுவது திருப்திகரமாக இருப்பதை பார்க்கலாம்'' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |