4 ரன்னில் தவறிய சதம்..ஆனாலும் கோஹ்லியின் சாதனையை தூளாக்கிய ஜோஸ் பட்லர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 96 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார்.
ஜோஸ் பட்லர் ருத்ர தாண்டவம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய முதல் டி20 போட்டி ரிவர்சைடு மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய ஜோஸ் பட்லர் (Jos Buttler) 59 பந்துகளில் 96 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
ஜேமி ஸ்மித் 20 பந்துகளில் 38 ஓட்டங்களும், ஜேக்கப் பெத்தெல் 23 ஓட்டங்களும் எடுத்தனர். ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
How does he make something so difficult look so easy? 🤔 pic.twitter.com/OwYXliF7SV
— England Cricket (@englandcricket) June 6, 2025
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 167 ஓட்டங்களே எடுத்ததால், இங்கிலாந்து 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக எவின் லீவிஸ் 39 (23) ஓட்டங்களும், ரஸ்டன் சேஸ் 24 (20) ஓட்டங்களும் எடுத்தனர். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டவ்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கோஹ்லியின் சாதனை முறியடிப்பு
இப்போட்டியில் அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய கோஹ்லியின் சாதனையை முறியடித்தார்.
விராட் கோஹ்லி (Virat Kohli) 570 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், ஜோஸ் பட்லர் 611 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித், பாபர் ஆகியோருடன் மூன்றாவது இடத்தை (5 அரைசதங்கள்) பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |