இன்னும் சில வாரங்கள் கலாட்டாவாக இருக்கப் போகிறது: அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று சவுத்தம்டாமில் தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியுடன், அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மோதவுள்ளது. எனவே இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஜோஸ் பட்லர் இந்த தொடர் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'இன்னும் சில வாரங்கள் கலாட்டாவாக இருக்கப் போகிறது! அதில் செல்வதற்கு காத்திருக்க முடியவில்லை' என தெரிவித்துள்ளார்.
It's going to be a fun few weeks! Can't wait to get going! pic.twitter.com/J9CbxNYf9i
— Jos Buttler (@josbuttler) July 7, 2022
ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்த பட்லர், கடைசியாக விளையாடிய ஸ்காட்லாந்து தொடரிலும் வெளுத்து வாங்கினார். இயான் மோர்கன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து கேப்டனாக பதியேற்றிருக்கும் பட்லர் இந்த தொடரிலும் அதிரடியில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
PC: Twitter