பிளே ஆஃப்பிற்கு செல்ல முடியவில்லை, அடுத்த ஆண்டு சந்திப்போம்: சிக்ஸர் மன்னன் வருத்தம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாததால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.
IPL
ஆனால் சில அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் 14 புள்ளிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.
ஜோஸ் பட்லர் வருத்தம்
இந்நிலையில் சிக்ஸர் மன்னன் என வர்ணிக்கப்படும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ட்வீட் செய்துள்ளார்.
அதில், 'எங்களால் பிளே ஆஃப்களுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் ராஜஸ்தான் ராயல்சுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் இந்த சீசனில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி. அடுத்த ஆண்டு சந்திப்போம்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Gutted we couldn’t make the playoffs, but thank you to everyone at @rajasthanroyals and the fans for all your support over the season.
— Jos Buttler (@josbuttler) May 23, 2023
See you next year ?? @rajasthanroyals #Hallabol pic.twitter.com/wG81CmZmgj