பிரான்சில் முதன்முறையாக கருப்பினப்பெண் ஒருவருக்கு ஹீரோக்களின் கல்லறையில் இடம்: சில சுவாரஸ்ய தகவல்கள்
பிரான்சில் முதன்முறையாக கருப்பினப்பெண் ஒருவருக்கு ஹீரோக்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் இடம் கொடுக்கப்பட உள்ளது.
பிரான்சில், நாட்டுக்காக பாடுபட்ட தேசிய ஹீரோக்களுக்கு உயரிய கௌரவம் ஒன்று செய்யப்படுவதன் அடையாளமாக, அவர்களது உடல் French Panthéon of national heroes என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
இதுவரை 80 பேருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. அவர்களின் ஐந்து பேர் மட்டுமே பெண்கள். அங்கு தற்போது Joséphine Baker என்ற கருப்பினப் பெண்ணுக்கு இடமளிக்கப்பட உள்ளதுடன், பிரபல அறிவியலாளரான Marie Curieக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
யார் இந்த Joséphine Baker?
Joséphine அமெரிக்காவில் பிறந்த ஒரு கருப்பினப்பெண். பிறகு அவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றார். அவர் ஒரு காபரே நடன மங்கை. பிரபலங்கள் எல்லாம் பார்க்க விரும்பிய அந்த நடன மங்கைக்கு ஏன் பிரான்சின் உயரிய விருது?
பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் 1939ஆம் ஆண்டு யுத்தம் உருவானபோது, ஒரு உளவாளியாக செயல்பட்டுள்ளார் Joséphine. பார்ட்டிகளில் பங்கேற்கும் வழக்கம் கொண்ட Joséphine, தான் சந்திக்கும் ஜேர்மன் அதிகாரிகளிடமிருந்து அவர்களது படைகள் எங்கு குவிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற முக்கிய தகவல்களை சேகரித்து, அவற்றை, இரகசிய, கண்ணுக்கு தெரியாத மையால் எழுதி, தன் உள்ளாடைகளுக்குள் மறைத்துவைத்துக்கொள்வாராம்.
பிரபலங்களை சோதனையிடும்போது அவர்களது உள்ளாடைகளை சோதனையிடமாட்டார்கள் என்பதால், முக்கிய தகவல்களை உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, தன்னிடம் கூட்டமாக மக்கள் வந்து ஆட்டோகிராப் கேட்பதில் மும்முரமாக இருக்கும்போது அந்த தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகளிடம் சேர்த்துவிடுவார் அவர்.
இரண்டாம் உலகப்போரின்போது அவர் செய்த தன்னலமற்ற பணிகளுக்காக, Joséphineக்கு பிரான்சின் உயரிய விருதுகளான Croix de guerre, the Rosette de la Résistance மற்றும் Chevalier of the Légion d'honneur ஆகிய விருதுகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு உயரிய கௌரவம் ஒன்றை செய்வதற்காக அவரது உடல் French Panthéon of national heroes என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் தனக்குப் பிடித்த இடத்தில், தனக்குப் பிடித்தவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவரது உடலை அவரது வீட்டின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து தோண்டி எடுக்க அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கௌரவத்துக்காக கட்டாயம் ஒருவரது உடல் Panthéon கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்படவேண்டும் என்ற அவசியம் இல்லாததால், Joséphine நினைவாக, அங்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.