ஓ கடவுளே! நிஜமாவா? மகனின் சாதனையை அறிந்ததும் மைதானத்தில் ஆச்சரியப்பட்ட தாய் (வீடியோ)
பிக்பாஷ் லீக் தொடரில் தனது மகன் சாதனை படைத்திருப்பதை அறிந்த தாய், ஆச்சரியமாக கேட்ட தருணம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சாதனை சதம் விளாசிய வீரர்
BBL (பிக்பாஷ்) தொடரின் அரையிறுதிப் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
The moment ? pic.twitter.com/26IEsC7k9A
— Brisbane Heat (@HeatBBL) January 22, 2024
இப்போட்டியில் ஜோஷ் பிரவுன் (Josh Brown) 140 (57) ஓட்டங்கள் விளாசினார். இதில் 12 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம் BBL வரலாற்றில் மூன்றாவது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர், இரண்டாவது அதிவேக சதம் மற்றும் ஒரு இன்னிங்ஸில் (BBLயில்) அதிக சிக்ஸர் விளாசிய வீரர் ஆகிய சாதனைகளை ஜோஷ் படைத்தார்.
@HeatBBL (x)
மகிழ்ச்சியில் ஆழ்ந்த தாய்
இந்தப் போட்டியை அவரது தாய் நேரில் கண்டுகளித்தார். ஜோஷ் சாதனை சதம் விளாசியபோது, தொகுப்பாளினி எர்ன் ஹாலண்ட் உங்கள் மகன் சாதனை படைத்திருக்கிறார் தெரியுமா என்று கேட்டார்.
அதனை கேட்டதும் பிரவுனின் தாய் ஆச்சரியமடைந்தார். அவர், 'ஓ அப்படியா..நம்பமுடியவில்லை..கடவுளே!, இது ஆச்சரியமாக இருக்கிறது. என்னால் உண்மையில் பேச முடியவில்லை. அவர் மிகவும் அற்புதமான மகன்.
Josh Brown's mum is in disbelief ?@erinvholland | #BBL13 pic.twitter.com/7DEzsMXeWA
— 7Cricket (@7Cricket) January 22, 2024
நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். கிரிக்கெட் மட்டுமல்ல, கோல்ப் மற்றும் கால்பந்து போட்டிகளிலும் அவன் சிறந்து விளங்கினான். கால்பந்து போட்டியில் 8 வயதில் 10 கோல்கள் அடித்திருக்கிறான்' என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தள ஊடகத்தில் பகிரப்பட்டு 57,000 பார்வைகளை பெற்றுள்ளது. ஜோஷ் பிரவுன் வடக்கு பிரிஸ்பேனில் உள்ள Cooper கிரிக்கெட் கிடங்கில் Bat தயாரிக்கும் நபராக வேலை பார்த்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |